Monday, February 20, 2012

அதோ தெரிகிறது அன்பு  

அன்பின் திரிபுகளை எண்ணிக் கிடந்தான்,
பெருங் காய்ச்சல் கண்ட ஒரு நாளில்.
தன்னிடமே கேட்டான் வாழ்க்கை கேள்வி ஒன்று.

‘கலப்படம் இல்லா அன்பு எங்கே?'

மதிய உணவு வேளையும் வந்து போனது; விடை வரவில்லை.

ரொட்டித் துண்டை புறந்தள்ளி,
தானும் காய்ந்து கிடந்தது அங்கொன்று.
தாய்மை, நட்பு, பக்தி எல்லாம் கலந்து அவனையே பார்த்தபடி, அவனது நாய்.

விடை மட்டுமல்ல, கடவுளும் கிடைத்தார் அந்தக் கண்களில்.

ninavugal

பார்த்தும் கண்கள் கலங்கி தான்
போயின....!
உன்னை சந்தித்த இடத்தை பார்த்து
வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல
இதயத்திற்கும் தான்  உயிரே????
உன்னை பிரிய மனம் இல்லை
உயிர் இருக்கிறது எடுத்துக்கொள்