அதோ தெரிகிறது அன்பு
அன்பின் திரிபுகளை எண்ணிக் கிடந்தான்,
பெருங் காய்ச்சல் கண்ட ஒரு நாளில்.
தன்னிடமே கேட்டான் வாழ்க்கை கேள்வி ஒன்று.
‘கலப்படம் இல்லா அன்பு எங்கே?'
மதிய உணவு வேளையும் வந்து போனது; விடை வரவில்லை.
ரொட்டித் துண்டை புறந்தள்ளி,
தானும் காய்ந்து கிடந்தது அங்கொன்று.
தாய்மை, நட்பு, பக்தி எல்லாம் கலந்து அவனையே பார்த்தபடி, அவனது நாய்.
விடை மட்டுமல்ல, கடவுளும் கிடைத்தார் அந்தக் கண்களில்.
No comments:
Post a Comment